ராமாயணம் ரன்னிங் டைம் 30 நிமிடம் குறைவு..

18.09.2026 14:40:52

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம் சர்வதேச பார்வையாளர்களுக்காக ஒரு சிறப்பு ஆங்கிலப் பதிப்பை வெளியிடவுள்ளது. இந்திய மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களின் ரசிப்புத் தன்மையை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆங்கிலப் பதிப்பானது இந்தி மற்றும் இதர இந்திய மொழிப் பதிப்புகளை விட சுமார் 30 நிமிடங்கள் குறைவாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சர்வதேச சினிமா ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த ஆங்கில பதிப்பில் பாடல்கள் முற்றிலும் தவிர்க்கப்படவுள்ளன. ஆனால், இந்திய மொழி பதிப்புகளில் வழக்கம்போல பாடல்களும் இசையும் மிகமுக்கிய அம்சமாக இடம்பெறும்.

சர்வதேச பார்வையாளர்கள் வேகமான திரைக்கதையை விரும்புவதால், சில காட்சிகளை சுருக்கி இந்த ஆங்கில வடிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக நடிகர்களின் உதட்டு அசைவுகள் பொருந்தும் வகையில் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 உலகளாவிய சினிமா ரசிகர்களைக் கவரும் வகையில் இந்த பிரம்மாண்டப் படம் பல்வேறு மாற்றங்களுடன் தயாராகி வருகிறது.