போராட்டத்தில் பங்கேற்ற 70 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழப்பு!
புதிய வேளாண் சட்டங்களை மீளப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற 70 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் 77 -ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். விளைபொருள்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை தொடா்ந்து வழங்க வேண்டும்.
இந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளையும் விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பை பொலிஸார் பலப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.