13வது திருத்தம் உட்பட அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு இலங்கையின் நலனிற்கு உகந்தது – இந்திய வெளிவிவகார அமைச்சர்

06.01.2021 10:23:01

13வது திருத்தம் உட்பட அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வில் ஈடுபடுவது இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம் நீதி சமாதானம் ஆகியவற்றிற்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இது 13வது திருத்தம் உட்பட இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ள அர்த்தபூர்வமான அதிகாரபகிர்விற்கும் பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார்