உலக ‘சூப்பர் ஸ்டார்’ கோஹ்லி
08.09.2021 09:11:56
‘‘உலகின் ‘சூப்பர் ஸ்டார்’ கோஹ்லி தான். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்,’’ என ஷேன் வார்ன் தெரிவித்தார்.
இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆக, அடுத்த இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. நான்காவது டெஸ்ட் ஓவலில் நடந்தது. முதல் நாள் ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் இந்திய அணி 127/7 என்ற மோசமான நிலையில் இருந்தது. தவிர முதல் இன்னிங்சில் 99 ரன் பின்தங்கியது.
இருப்பினும் எழுச்சி பெற்ற இந்திய அணிக்கு கடைசி நாளில் பவுலர்கள் விக்கெட் வேட்டை நடத்தினர்.