ஆப்கனில் பெண்கள், குழந்தைகளின் கல்வியைக் காப்பாற்ற யுனெஸ்கோ வலியுறுத்தல்

11.09.2021 15:50:38

‛‛ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் இடைக்கால ஆட்சி விரைவில் அமைய இருக்கும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வியைக் காப்பாற்ற வேண்டும்,'' என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் கடந்த மாதம் 31ம் தேதியோடு வெளியேறியபின் அந்நாடு முழுமையாக தலிபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. அங்கு இடைக்கால ஆட்சியை நிறுவும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். இடைக்கால அரசின் பிரதமராக அகுந்தஸாவும் இரு துணைப் பிரதமர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 1995-2001ம் ஆண்டு ஆட்சியைப் போல் இல்லாமல் பெண்கள், சிறுமிகளுக்கு கல்வி உரிமை வழங்கப்படும். பெண்கள் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென பெண்கள் வேலைக்கு செல்ல தடையும், பெண்கள் விளையாட்டுக்கு தடை விதித்தும் தலிபான்கள் உத்தரவிட்டனர்.