ரஷ்யா விமான விபத்தில் 16 பேர் பலி

11.10.2021 02:54:16

ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 16 பேர் பலியாகினர்.

23 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ரஷ்ய அவசர கால அமைச்சு தெரிவித்துள்ளது.

எல்.410 ரக விமானம் ஒன்று மத்திய ரஷ்யாவின் ரட்டஸ்ரான் குடியரசு வான்பரப்பில் விபத்திற்கு உள்ளானதாக குறிப்பிடப்படுகிறது.

விபத்தின்போது குறித்த விமானத்தில் 23 பேர் இருந்ததாகவும் அவர்களில் ஏழு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.