சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய தொழில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி !

03.03.2021 08:56:09

 

இலங்கை பெண்கள் பணியகத்தின் அனுசரனையுடன் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய தொழில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு இன்று (புதன்கிழமை) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகொரள திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன ஆகியோர் கண்காட்சியை திறந்து வைத்து கண்காட்சி பொருட்களை பார்வையிட்டனர்.

இதன்போது உள்ளூர் உற்பத்திப்பொருற்களும் குறிப்பாக பெண் முயற்சியாளர்களால் தயாரிக்கப்பட்டவை கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.