இரு வாரங்களில் 1,000 ரூபாய் சம்பளம் குறித்த வர்த்தமானி வெளியாகும் – அமைச்சர்

09.02.2021 10:37:39

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்கும் திட்டம் இரண்டு வாரங்களுக்குள் வர்த்தமானி அறிவிப்பு மூலம் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் பேசிய பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன, ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் பின்னர் இந்த திட்டம் சட்டமாக மாறும் என்றும் கூறினார்.

இருப்பினும் இறுதி முடிவு எடுக்கப்படும் முன்னர் பெருந்தோட்ட உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் கவலை தொடர்பாகவும் அரசாங்கம் கவனத்தில் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு வர்த்தமானி அறிவித்தல் வெளியானதும் தொழிலாளர்களுக்கான அதிகரித்த ஊதியத்தை தோட்ட உரிமையாளர்கள் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.