யாழ் காவல் நிலைய பொறுப்பதிகாரி காவல்துறை அத்தியட்சகராக பதவி உயர்வு!

08.10.2021 14:36:27

யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமை காவல்துறை பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ, உதவி காவல்துறை அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

நாட்டில் 225 தலைமை காவல்துறை பரிசோதகர்கள், உதவி காவல்துறை அத்தியட்சகர்களாக (ஏ.எஸ்பி) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

அவர்களில் யாழ்ப்பாணம் தலைமையகப் காவல் நிலைய தலைமை காவல்துறை பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோவும் உதவி காவல்துறை அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.