வியாபாரிகளுக்கு அன்டிஜன் பரிசோதனை

18.09.2021 10:29:53

கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு  அண்மையில் வியாபாரம் மேற்கொண்ட வியாபாரிகள் பொதுமக்கள் என பலருக்கும் அன்டிஜன் பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டது.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு வரும் ஒக்டோபர் முதலாம் திகதிவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் யாழ்ப்பாண  காவற்துறையினர் மற்றும் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினர் இணைந்து அன்டிஜன் பரிசோதனையை மேற்கொண்டனர். இதன்போது சிலருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

நேற்று மாலை மதுபானசாலைகள் விற்பனையில் ஈடுபடலாம் என்ற செய்தி பரவியநிலையில் மதுப்பிரியர்கள் சமூகஇடைவெளியை மீறி மதுபானங்களை கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

அவற்றை கண்காணிக்காத சுகாதாரப் பிரிவினரும் காவற்துறையினரும் சந்தை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக அங்கு நின்ற பலரும் விசனம் வெளியிட்டனர்.