'அடுத்தும் திமுக ஆட்சி தான்'-

22.11.2024 08:13:52

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குட்டியபட்டி, அனுமந்தராயன் கோட்டை, குட்டத்துப்பட்டி, மாங்கரை, புதுப்பட்டி, தெத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதில் சுமார் 369.02 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளான அங்கன்வாடி மையம், நியாயவிலைக் கடை, மற்றும் சமுதாயக் கூடத்தினை திறந்து வைத்தார்.

   

மேலும் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அவலாச்சிப்பட்டியில் புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து வைத்தார் அதைத் தொடர்ந்து உசிலம்பட்டி மாங்கரை உட்பட பல ஊர்களில் ரேஷன் கடைகளை திறந்து வைத்து பல திட்டங்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அடிக்கல் நாட்டினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, ''தமிழகத்தில் மக்களாட்சியே நடைபெறும். மக்கள் எந்த ஆட்சியை விரும்புகிறார்களோ அந்த ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறும். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் அதிமுக தமிழக மக்களிடத்தில் இருந்து விலகிச் சென்று விட்டது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடைபெறும்''என்றார்.

மேலும் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு, ''ஒரு மாவட்டத்தில் நடைபெறும் விபத்து மற்றும் சம்பவத்திற்கு மாநிலம் முழுவதும் பொறுப்பாகாது. தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக திகழ்கிறது. வெளிநாடுகளில் இருந்து தொழில் தொடங்க ஏராளமானோர் வருகை தருகின்றனர். தவறு செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்ப