குக் வித் கோமாளி இந்த சீசனில் வெற்றி பெற்றவர்

25.07.2022 11:29:07

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசனின் இறுதிப் போட்டி நேற்று நடைப்பெற்றது. இதன் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது 'குக் வித் கோமாளி' எனும் சமையல் நிகழ்ச்சி. கலகலப்பு நிறைந்த இந்நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுவரை இந்நிகழ்ச்சி இரண்டு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் வெற்றி பெற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது தொடங்கி, தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியது. இதன் இறுதிப்போட்டிக்கு அம்மு அபிராமி, ஸ்ருத்திகா, கிரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப், தர்ஷன், வித்யுலேகா ஆகிய 6 போட்டியாளர்கள் நுழைந்தனர்.

இந்நிலையில், குக் வித் கோமாளியின் இறுதிப் போட்டியில் டைட்டில் வின்னராக ஸ்ருதிகா வெற்றிப்பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை தர்ஷனும், மூன்றாவது இடத்தை அம்மு அபிராமியும் கைப்பற்றியுள்ளனர். இவர்களுக்கு ரசிகர்கள் சக போட்டியாளர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.