படகு விபத்து : மீனவர் ஒருவர் உயிரிழப்பு

11.08.2021 14:28:00

காலி தொடங்தூவ பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற படகு விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூன்று மீனவர்கள் பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான மூவரில் இருவர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.