கனடிய பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்!

28.12.2024 13:26:23

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொனதன் வில்லியம்சன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 7ம் திகதி நாடாளுமன்ற குழுவில் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கனடிய பிரதமருக்கு எதிராக கன்சர்வேட்டிவ் கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானங்கள் தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.