பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து ஸ்டென் வாவ்ரிங்கா விலகல் !
20.05.2021 09:46:36
ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ஸ்டென் வாவ்ரிங்கா விலகியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் இடது காலில் ஏற்பட்ட காயத்துக்கு சத்திர சிகிச்சை செய்துக்கொண்ட வாவ்ரிங்கா, இன்னமும் காயத்திலிருந்து முழுமையாக மீளாததால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதேவேளை 36 வயதான வாவ்ரிங்கா விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கு முன்பாக நடக்கும் புற்தரை டென்னிஸ் தொடர்களில் களம் திரும்ப திட்டமிட்டுள்ளார்.
செம்மண் தரையில் நடைபெறும் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில், ஸ்டென் வாவ்ரிங்கா கடந்த 2015ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டுக்கான பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகின்றது.