சொந்த மண்ணில் தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்ரேலிய அணிகளை எதிர்கொள்கின்றது.
தற்போது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் விளையாடிவரும் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு, எதிர்வரும் மாதங்களில் அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முன்னணி வீரர்களுக்கு ஒரிரு போட்டிகள் அல்லது தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டு எதிர்வரும் உலகக்கிண்ண தொடருக்கு முன்னோட்டமாக இந்த தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேற்கிந்திய தீவுகளுக்கு, கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடர்களில் விளையாடவுள்ளது.
இத்தொடர் ஒகஸ்ட் 7ஆம் திகதி முடிந்தவுடன் இந்திய அணி 6 ஆண்டுகளுக்கு பிறகு அதே மாதம் சிம்பாப்வே செல்கின்றது.
அங்கு செல்லும் இந்தியக் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது. இதன் போட்டிகள், ஒகஸ்ட் 18ஆம், 20ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் ஹராரேயில் நடைபெறுகின்றது.
இந்த தொடரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி, எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் சொந்த மண்ணில் தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்ரேலிய அணிகளை எதிர்கொள்கின்றது.
இந்திய கிரிக்கெட் அணி, எதிர்வரும் செப்டம்பர், ஒக்டோபரில் ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவையும், ரி-20 தொடரில் தென்னாபிரிக்கா அணி மற்றும் அவுஸ்ரேலியாவையும் சொந்த மண்ணில் சந்திக்கிறது.