'உலக வல்லரசுகளின் போர்களில் இலங்கையின் ஆதரவு'
உலக வல்லரசுகளின் போராட்டங்களில் இலங்கை பக்கச்சார்பின்றி அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படுவதன் மூலம் சர்வதேச அரங்கில் இலங்கையை நல்ல நிலைக்கு உயர்த்த முடியும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்று (17) தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியின் 97 ஆவது பயிற்சியை முடித்து வெளியேறும் கடட் உத்தியோகத்தர்களின் பிரியாவிடை மரியாதை அணிவகுப்பில் உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை ஒரு தீவு நாடு
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அதிபர், ஒரு நாடு என்ற அடிப்படையில் நாம் உலக வல்லரசுகளிடமிருந்து ஒரு தரப்பாக பிரிந்து நிற்கவில்லை. உலக வல்லரசுகளுடன் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை.
ஏனென்றால் நாம் ஒரு தீவு நாடு. அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும்.
இந்த நாட்டைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. உள்ளக மற்றும் வெளிப்புற தாக்கங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் திறன் உங்களிடம் உள்ளது.
உங்களை உள்ளடக்கிய எங்கள் இராணுவத்துக்கு இராணுவ அனுபவம் உள்ளது. அவர்களுக்கு சர்வதேச போர் அனுபவம் உள்ளது.
ஐ.நா படைகளுடன் இணைவு