நீதியரசர் 21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து விலகல்
29.03.2021 09:40:08
கொரோனா தொற்றினால் உயிரிழந்த பிறந்து 20 நாட்களே ஆன குழந்தையின் பெற்றோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையில் இருந்து நீதியரசர் ஒருவர் விலகியுள்ளார்.
குழந்தையை தகனம் செய்யவதற்கு எதிராக தாக்கல் செய்த குறித்த மனு மீதான விசாரணைக்காக ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் கொண்ட அமர்வு ஸ்தாபிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த விசாரணையில் இருந்து விலகுவதாக நீதியரசர் யசந்த கோதாகொட அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து மனுமீதான பரிசீலனைகள் எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.