உலக கிண்ண தொடரில் மேலும் இரு லீக் போட்டிகள் இன்று..!
உலக கிண்ண இருபதுக்கு தொடரில் மேலும் இரு லீக் போட்டிகள் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளன.
டுபாயில் இடம்பெறவுள்ள குழு இரண்டுக்கான போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.
கேன் வில்லியம்ஸன் தலைமையில் நியூசிலாந்து அணியும், கயில் கொட்ஷர் தலைமையில் ஸ்கொட்லாந்து அணியும் களமிறங்கவுள்ளன.
சுப்பர் டுவெல்வ் சுற்றில் நியூசிலாந்து அணி இதுவரை ஒரு போட்டியில் வெற்றிப்பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டி, குறித்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமையவுள்ளது.
இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன.
அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை நூலிழையில் கொண்டுள்ள இந்திய அணி இன்றைய போட்டியில் அபார வெற்றிப்பெறவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது.
சுப்பர் டுவெல்வ் சுற்றில் பற்கேற்ற இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது இந்நிலையில் உலக கிண்ண தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாக பாகிஸ்தான் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.