ஜனாதிபதி விடுதலை செய்தியுடன் வர வேண்டும்!
14.01.2026 13:38:14
பொங்கல் தினத்திற்கு யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை செய்தியுடன் வர வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இந்த எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர்.