ராஜஸ்தானில் அரச தேர்வில் மோசடி.

27.08.2025 08:08:54

ராஜஸ்தானில் அரச வேலைக்கான தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் பொது தேர்வு ஆணையம் (RPSC) அண்மையில் நடத்திய விசாரணையில், போலி ஊனமுற்ற சான்றிதழ்கள், போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்களை பயன்படுத்தி தேர்வில் பங்கேற்ற 524 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்து 415 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 109 பேருக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடை செய்யப்பட்டவர்களில் 514 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒதுக்கீட்டு சலுகை பெற போலி விவாகரத்து சான்றிதழ்களை பயன்படுத்திய சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் அதுகுறித்து தனி விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.