சஜித்தின் தரப்பிலிருந்து விழுகிறது முக்கிய விக்கெட்
கடந்த தைப் பொங்கல் தினத்தன்று கொழும்பு அரசியலுடன் மிகவும் நெருங்கிய தொடர்புள்ள பெண் ஒருவரின் வீட்டில் தைப்பொங்கல் விசேட வைபவம் இடம்பெற்றது.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பண்டிகையை தனது வீட்டில் நடத்தும் இந்தப் பெண், அதில் கட்சி, எதிர்ப்பு இல்லாமல் அரசியல்வாதிகள் கலந்துகொள்வது வழக்கம்.
பசில் -ராஜித விசேட கலந்துரையாடல்
அதன்படி, அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் இரண்டு விசேட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்களில் ஒருவர் மொட்டுவின் மூளையாக செயற்படும் பசில் ராஜபக்ச. மற்றைய நபர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, அவர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக வதந்திகள் பரவியுள்ளன.
இருவருக்குமிடையில் விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது. ராஜித அரசாங்கத்துடன் இணைவது பற்றியே கலந்துரையாடப்பட்டது. இது குறித்து முதலில் வினவிய பசில், ராஜித அரசாங்கத்தில் இணைந்து அமைச்சராவதை தான் எதிர்ப்பதாக அரசியல் களத்தில் ஒரு கருத்து பரவி வருவதாகவும், அரசாங்கத்தில் ராஜித இணைவதற்கு தான் எதிரானவன் இல்லை எனவும் தெரிவித்தார்.
எதிரானவன் இல்லை
நீங்கள் அமைச்சு பதவி எடுப்பதற்கு நான் எதிரானவன் என்ற பேச்சு எங்கும் உள்ளது. இதற்கு நான் எந்த வகையிலும் எதிரானவன் அல்ல, ஏனென்றால் நீங்கள் எங்களுடன் பணியாற்றிய ஒருவர். அதனாலேயே நீங்கள் அரசாங்கத்திற்குள் வந்து எம்முடன் இணைந்து செயற்படுங்கள்...’ என்று பசில் கூறியபோது, ‘அதிபர் ரணில் ஏன் இதனை ஒத்திவைக்கிறார்... இல்லையேல் நானும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்புகின்றேன்...’ என நான் கூறுகின்றேன் என ராஜித தெரிவித்தார்.
ராஜிதவின் பதிலின்படி, எதிர்காலத்தில் ராஜிதவுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம்.