பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்து19 பேர் உயிரிழப்பு

04.07.2022 10:26:58

பாகிஸ்தானில், மலைப் பாதையில் சென்ற பஸ்,டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், 19 பேர் உயிரிழந்தனர்.

காயம் அடைந்த 11 பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதில் இருந்து குவெட்டா நகருக்கு,நேற்று காலை ஒரு பஸ் சென்றது. அப்போது, கன மழை பெய்து கொண்டிருந்தது. 

பலுசிஸ்தான் மாகாணத்தில், குவெட்டா நகருக்கு அருகே மலைப் பகுதியில் வளைவில் திரும்பியபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. 

அதே இடத்தில், 19 பேர் உயிரிழந்தனர்.காயமடைந்த 11 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஉள்ளனர். காயம் அடைந்தவர்களில் சிலர், ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.