71 ஆவது உலக போட்டியில் மகுடத்தைச் சூடிய செக் குடியரசு பெண்!
11.03.2024 00:04:59
இந்தியாவில் நடைபெற்ற 71 ஆவது உலக அழகிப் போட்டியில், செக் குடியரசைச் பெண்ணொருவர் மகுடம் சூடினார்.
25 வயதுடைய கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண்ணே 71 ஆவது உலக அழகிப் போட்டிக்கான மகுடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
இப் போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 117 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் இந்தியாவை சேர்ந்த சினி ஷெட்டி உட்;பட 14 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
இந்நிலையில், செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகி பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.