மேகதாது அணை கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிப்போம் – எடியூரப்பா
14.07.2021 10:21:31
மேகதாது அணை கட்டுவதற்கு அனைத்து உரிமைகளும் கர்நாடகத்திற்கு இருப்பதால், அதற்கான திட்டப் பணிகளைத் ஆரம்பிப்போம் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அல்லது வேறு எந்த மாநில அரசுகள் குறித்து எதுவும் பேசவிரும்பவில்லை.
மேகதாது அணை கட்டுவதற்கு எல்லா உரிமையும் கர்நாடகத்திற்கு இருப்பதால் அதற்கான திட்டப் பணிகளை ஆரம்பிப்போம். எதிர்வரும் நாட்களில் அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களையும் கண்டிப்பாக நிறைவேற்றுவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.