721 குடும்பங்களைச் சேர்ந்த 2,476 பேர் பாதிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 721 குடும்பங்களைச் சேர்ந்த 2,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 07 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (26) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 422 குடும்பங்களைச் சேர்ந்த 1,554 பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனகபுரம், மாவடியம்மன், தொண்டமான்நகர், கந்தபுரம், இராமநாதபுரம், திருநகர், கண்ணகிபுரம், ஜெயந்திநகர், திருவையாறு மேற்கு, கனகாம்பிகைக்குளம், உதயநகர் மேற்கு, அம்பாள்நகர், வட்டக்கச்சி, பொன்னகர், மலையாளபுரம், பெரிய பரந்தன் பகுதிகளிலேயே இவ்வாறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இதேவேளை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 278 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 03 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பிரமந்தனாறு, கல்மடுநகர், தர்மபுரம் கிழக்கு, தர்மபுரம் மேற்கு, உமையாள்புரம், பெரியகுளம், புன்னைநீராவி, பகுதிகளில் இவ்வாறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 04 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 01 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
கோவில் வயல், சோரன்பற்று, புலோப்பளை மேற்கு தம்பகாமம், முகாவில் இவ்வாறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 180 குடும்பங்களைச் சேர்ந்த 634 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடனர்.
ஞானிமடம், மட்டுவில்நாடு கிழக்கு, இரணைமாதா நகர், நல்லூர், பரமன்கிராய், கௌதாரிமுனை பகுதிகளில் இவ்வாறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் சீரற்ற வானிலை தொடர்பில் மகள்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இடர் கிராம சேவையாளர் ஊடாக முகாமைத்துவப்பிரிவு, பொலிஸார், இராணுவத்தினரின் உதவியை பெறுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் 163 குடும்பங்களைச் சேர்ந்த 468 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 193 பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் சீரற்ற வானிலை தொடர்பில் மகள்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இடர் கிராம சேவையாளர் ஊடாக முகாமைத்துவப்பிரிவு, பொலிஸார், இராணுவத்தினரின் உதவியை பெறுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.