சுதந்திர தினத்திற்கு வருகை தந்துள்ள விசேட அதிதி

04.02.2024 07:09:20

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவினர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

 

நாட்டை வந்தடைந்த அவர்களுக்கு பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வரவேற்பு அளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தூதுக்குழுவில் தாய்லாந்து பிரதமருடன், அந்த நாட்டின் பிரதிப்பிரதமர் பூம்தாம் வெச்சயச்சாய் உள்ளிட்ட மேலும் பலர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று நாட்டுக்கு வருகைதந்துள்ள தாய்லாந்து பிரதமர் நாளை இடம்பெறவுள்ள இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார்.