ஐபிஎல்லில் வரவிருக்கும் புதிய நடைமுறை ?

18.09.2022 10:19:51

இம்பாக்ட் பிளேயர் விதிமுறையானது சூப்பர்-சப் விதியுடன் ஓரளவு தொடர்புடையது

இந்த விதியின் மூலம் இரு அணிகளும் ஒரு இம்பாக்ட் பிளேயரை மட்டுமே பயன்படுத்த முடியும்

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் இம்பாக்ட் பிளேயர் விதியை பிசிசிஐ கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹாக்கி, கால்பந்து விளையாட்டுகளில் ஆட்டத்தின் நடுவில் மாற்று வீரரை களமிறக்கும் விதிமுறை உள்ளது. ஆனால் கிரிக்கெட்டில் இந்த விதிமுறை இல்லை.

ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே பீல்டிங் செய்ய ஒரு வீரர் அனுமதிக்கப்படுவார். இந்த நிலையில் இம்பாக்ட் பிளேயர் எனும் விதிமுறையை ஐபிஎல் கிரிக்கெட்டில் கொண்டுவர பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விதிமுறையானது, ஒவ்வொரு இன்னிங்சின் முதல் 14 ஓவர்களில் மாற்று வீரர் ஒருவரை இரண்டு அணியும் களமிறக்கலாம். அவர் 4 ஓவர்கள் வீசலாம், துடுப்பாட்டமும் செய்யலாம்.

இது அணிகளுக்கு தங்கள் திட்டங்களை வைக்க சிறந்த வாய்ப்பை வழங்கும் மற்றும் ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கும். 14வது ஓவர் முடிந்ததும் இந்த விதியை அமல்படுத்த முடியாது.

இந்த விதிமுறையின் சோதனை சையத் முஷ்டாக் அலி தொடரில் அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.