மோசமான வார்த்தைகளை பயன்படுத்திய ஜேர்மன் அமைச்சருக்கு கண்டனம் !
ஜேர்மனியில், கொரோனா தடுப்பூசி பெறாதவர்களை எதிர்மறையான வார்த்தைகளால் விமர்சித்த அமைச்சருக்கு வைராலஜி துறை நிபுணர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn, தடுப்பூசி பெறாதவர்களை எச்சரிக்கும் வகையில், இந்த குளிர்காலம் முடிவடையும்போது, ஒருவேளை, சற்று இழிவாகக் கூறினால், ஜேர்மனியிலுள்ள அனைவரும், ஒன்றில் கொரோனா தடுப்பூசி பெற்றிருப்பார்கள், கொரோனாவிலிருந்து விடுபட்டிருப்பார்கள் அல்லது இறந்திருப்பார்கள் என்று கூறியிருந்தார்.
ஜேர்மனி கொரோனாவின் நான்காவது அலையுடன் போராடிக்கொண்டிருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும், ஜேர்மனியில் 30,643 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப்பிரிவுகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருவதும் உண்மைதான்.
ஆனாலும், ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn, தடுப்பூசி பெறாதவர்களை எச்சரிக்கும் வகையில் பேசியது தவறானது என Bonn பல்கலைக்கழக பேராசிரியரும், வைராலஜி துறை நிபுணருமான Hendrik Streeck என்பவர் தெரிவித்துள்ளார்.