தவறாக கமெண்ட்ஸ் செய்பவர்களுக்கு முடிவு கட்டிய இன்ஸ்டாகிராம்! எப்படி ?

13.08.2021 12:19:22

 

சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசுபவர்களை தவிர்க்க இன்ஸ்டாகிராம் புது வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவிற்கு தீமைகளும் நிறைந்திருக்கின்றது. அதலில் ஒன்று தான் cyber bullying. ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை பற்றி தவறாக விமர்சிக்க ஒரு கூட்டமே உள்ளது.

இதில் பெரும்பாலும் மாட்டி கொள்வது பிரபலங்கள் மற்றும் பெண்கள் தான். இதை தவிர்க்க பல்வேறு செயலிகள் புது புது வசதிகளை கண்டுபிடித்து வருகின்றது.

பேஸ்புக்கை தொடர்ந்து சமூக வளையதளத்தில் அதிக பயனர்களை கொண்டது இன்ஸ்டாகிராம். இது போன்ற பிரச்சனைகளுக்கு இன்ஸ்டாகிராம் அவ்வப்பொழுது பல தீர்வுகளை அளித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி 'limit' என்ற புதிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியது.

இந்த வசதியில் நம்மைப் பின்தொடராத அல்லது சமீபத்தில் பின்தொடரத் தொடங்கியவர் நமது பதிவுகளுக்கு கமெண்ட் செய்தாலோ அல்லது நமக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பினாலோ அதை நமக்கு காட்டாமல் இன்ஸ்டாகிாரம் மறைத்துவிடும்.

இந்த புதிய வசதி குறித்து பயனர்கள் இன்ஸ்டாகிராமை பாராட்டி வருகின்றனர்.