முகக்கவசம் அணியுமாறு கூறிய ஊழியரை தூக்கி தரையில் அடித்த இளைஞர்கள்

07.10.2021 06:54:46

மீகொட பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியரை தூக்கி தரையில் அடித்த இரண்டு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக் கவசம் அணியாத நபரிடம் அதனை அணியுமாறு கோரிய எரிபொருள் நிலைய ஊழியரை தூக்கி தரையில் அடித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

முகக் கவசம் அணியாமல் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு வந்த நபரை முகக் கவசம் அணியுமாறு ஆலோசனை வழங்கியமையினால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

மீகொட பொலிஸாரினால் நேற்று இரவு இந்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.