கோப் குழுவில் முன்னிலையாகிறார் திறைசேரியின் செயலாளர்!

30.04.2026 08:52:14

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட இணையவழி மோசடி சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக நிதி மற்றும் திறைசேரி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (30) அரசாங்க நிதி பற்றிய குழுவில் (கோப்) முன்னிலையாகவுள்ளார்.

 

அதன்படி, திறைசேரியின செயலாளர், நிதி அமைச்சின் பல மூத்த அதிகாரிகளுடன் இன்று பிற்பகல் 1:00 மணிக்கு கோப் குழுவில் முன்னியாகுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இணையவழித் திருட்டு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, சூரியப்பெருமாவும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கோப் குழுவில் முன்னர் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், வியாழக்கிழமை (30) அன்று குழுவின் முன் முன்னிலையாகவில்லை என சூரியப்பெரும கோப் குழுவுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.

திட்டமிடப்பட்ட அமர்வில் தன்னால் கலந்துகொள்ள இயலாது என்றும், மே 5 ஆம் திகதிக்குப் பின்னர் மாற்றுத் திகதியைக் கோரியுள்ளதாகவும் திற‍ைசேரியின் செயலாளரிடமிருந்து நேற்று குழுவுக்கு ஒரு கடிதம் வந்ததை கோப் குழுவின் தலைவர் ஹர்ஷா டி சில்வா உறுதிப்படுத்தினார்.