உண்மையை போட்டுடைத்த நடிகர் சூர்யா!
|
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர். தொடர்ந்து குறிப்பிடத்தக்க படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்காக அவர் கொடுத்து வருகிறார். 50 வயதை தொட்டு இருந்தாலும் சூர்யா தற்போதும் உடலை மிகவும் ஃபிட்டாக வைத்திருப்பது அவரது ரசிகர்களை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயமாக இருக்கிறது. |
|
இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் கருப்பு படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நடைபெற்றது. அதில் சூர்யா தனது ஃபிட்னஸ் பற்றிய ஒரு முக்கிய தகவலை தெரிவித்திருக்கிறார். அடிக்கடி டயட் இல்லாமல் இருப்பது யார் என தொகுப்பாளர் சுமா கேள்வி எழுப்ப, "நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க" என கார்த்தி ஜாலியாக கூறினார். சூர்யா உடனே "எனக்கு 25 வயதுக்கு பிறகு தான் ஒரு விஷயம் புரிந்தது. பாடி என்பது ஜிம்மில் உருவாக்கப்படுவது அல்ல, கிச்சனில் தான் அது உருவாகிறது." "ஜிம்முக்கு போறது வேஸ்ட். வாய்க்கு ஜிப் போடணும். அப்போதுதான் உடம்பு மாறும்" என சூர்யா கூறினார். உடனே கார்த்தி "என் வாய்க்கு ஜிப் இல்லை" என கூறி சிரித்துவிட்டார். |