ஜே.வி.பி- மெல்கம் சந்திப்பில் சந்தேகம்!

19.04.2024 15:44:57

ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள  நிலையில் மக்கள் விடுதலை முன்னணியினர், மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையுடன் இணைவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து பாலித்த ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளதாவது ”நாட்டிலுள்ள மதத்தலைவர்கள் மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடே, மக்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றனர். எனவே மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக மதத்தலைவர்கள் செயற்படவேண்டும்.

மதத்தலைவர்கள் சரியாக செயற்படுவீர்களாக இருந்தால் நாடு சிறப்பாக இருக்கும். கடந்த 2019 ஆம் எடுக்கப்பட்ட முடிவு நாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 2024 ஆண்டு ஒரு முடிவை எடுக்க வேண்டிய தேவையொன்று உள்ளது.

அந்த முடிவை எடுக்க வேண்டிய நேரம் வரும்போது அநாவசியமான பிரச்சினைகளை தவிர்த்து, மக்களுக்கு மீண்டும் ஒரு பிரச்சினையை உருவாக்காமல், சரியான ஒரு முடிவை எடுக்க மதத்தலைவர்களான நீங்கள் இடம்கொடுக்க வேண்டும்.

அதேபோன்று இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த ஜே.வி.பியினர் இன்று கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் இவ்வாறு மக்கள் விடுதலை முன்ணியினர்
மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையுடன் இணைவது ஏன் என மக்கள் சிந்திக்க வேண்டும். இவர்கள் இருவரும் எங்கு பயணிக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெளிவாக தெரிகிறது” இவ்வாறு பாலித்த ரங்கே பண்டார  தெரிவித்துள்ளார்.