உலகக்கிண்ண இருபதுக்கு இருபது போட்டிக்கான அரை இறுதி வாய்ப்பை தென்னாபிரிக்க அணி இழந்ததுள்ளது.
இங்கிலாந்து அணியை 10 ஓட்டங்களால் வீழ்த்தியும் உலகக்கிண்ண இருபதுக்கு இருபது போட்டிக்கான அரை இறுதி வாய்ப்பை தென்னாபிரிக்க அணி இழந்ததுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென்னப்பிரிக்கா அணி, 20 ஓவர்களில 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 189 ஓட்டங்களைக் குவித்தது.
இதில் குவின்டன் டி கொக் 34 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க ரெசி வென் டேர் டுசென் 94 ஓட்டங்களையும் ஏய்டன் மார்க்ராம் 52 ஓட்டங்களையும் அட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.
இதனை அடுத்து 190 என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து அணி சார்பாக மொயின் அலி 37 ஓட்டங்களையும் டேவிட் மாலன் 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் தென்னாபிரிக்க சார்பாக ரபாடா கடைசி ஓவரில் ஹெட்ரிக்கைப் பதிவு செய்தார்.