காங்கிரஸை கைகழுவும் ஸ்டாலின்?

28.02.2026 08:58:33

'புதிய கட்சிகள் கூட்டணியில் உள்ளதால் சீட் ஒதுக்க வேண்டி உள்ளது. 39 சட்டசபை தொகுதியெல்லாம் கிடையாது. 25 சட்டசபை தொகுதி+ ஒரு ராஜ்யசபா சீட் தருகிறோம். இதுதான் பைனல். இனி காங்கிரஸ் தான் தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வர வேண்டும். அப்படி இறங்கி வந்தால் மட்டும் தான் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த முடியும்'' என காங்கிரஸ் கட்சியிடம் கறார் காட்டியுள்ளது திமுக.

   

இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. திமுக தனது கூட்டணியை பலப்படுத்தி உள்ளது. புதிதாக மக்கள் நீதி மய்யம், தேமுதிக இணைந்துள்ளது. அதேபோல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமானார். திமுக – காங்கிரஸ் பிரச்சனை இதனால் திமுக கூட்டணி கடந்த முறையை விட வலுவாகி உள்ளது. அதேவேளையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பிரச்சனை செய்து வருகிறது. கூடுதல் இடம் கேட்பதோடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கிறது காங்கிரஸ்.

இதனால் திமுக பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை முதற்கட்டமாக முடித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் பேசவில்லை. காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை திமுக ஏற்கவில்லை. கூட்டணியில் இழுபறி ''தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது’’ என முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது கூடுதல் தொகுதி கோரிக்கையாவது நிறைவேறும் என்று நினைத்தது. ஆனால் அதனையும் திமுக ஏற்கவில்லை.

இதனால் திமுக -காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நிலவி வருகிறது. இதுபற்றி 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பெயர் சொல்ல விரும்பாத திமுகவின் மூத்த தலைவர் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இறங்கி வர வேண்டும் இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: '' நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக காங்கிரஸிடம் தெரிவித்துவிட்டோம். அவர்களுக்கு 25 சட்டசபை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் வழங்க தயாராக இருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சி 39 சட்டசபை தொகுதி, 2 ராஜ்யசபா சீட்டுகளை கேட்கிறது.

புதிய கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டியுள்ளதால், அவர்களின் கோரிக்கையை ஏற்பது சாத்தியமில்லை. காங்கிரஸ் தான் தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வர வேண்டும். அப்படி இறங்கி வந்தால் மட்டும் தான் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த முடியும். பந்து இப்போது அவர்கள் பக்கம் தான் உள்ளது'' என்று அறிவித்துள்ளார். வந்தா வாங்க.. இல்லாட்டி போங்க இதன்மூலம் கூட்டணியை தொடர வேண்டும் என்றால் திமுக பார்த்து வழங்கும் தொகுதிகளை காங்கிரஸ் கட்சி வாங்கி கொள்ள வேண்டும். மாறாக திமுகஇறங்கி செல்லாது. தனது நிலைலப்பாட்டில் உறுதியாக உள்ளதாக திமுக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் ராகுல் காந்தியை திமுக எம்பி கனிமொழி சந்தித்து பேசினார். அதேபோல் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரையும், கூட்டணி தொடர்பாக கனிமொழி சந்தித்து பேசினார். இதுதவிர காங்கிரஸ் கட்சியின் கேசி வேணுகோபால், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். ஆனாலும் கூட இன்னும் திமுக - காங்கிரஸ் கூட்டணயில் இழுபறி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடருமா? இல்லையா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.

இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு அழைப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அந்த தலைவர், ''இது எங்களுக்குத் தெரியும். ஆனால், தமிழக வெற்றி கழகம் காங்கிரசை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள விரும்பும் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் அந்தக் கட்சி பாஜகவின் அழுத்தத்தில் உள்ளது" என்றார் அந்த திமுகவின் மூத்த தலைவர்.