வவுனியாவில் மயங்கி விழுந்து ஒருவர் மரணம்

17.08.2021 08:49:44

வவுனியா ஓமந்தை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நபரொருவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.

ஜேசிபி வாகனத்தின் உதவியாளராக கடமையாற்றிய குறித்த நபர் ஓமந்தை பகுதியில் கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த சமயத்தில் இன்று காலை 10.00 மணியளவில் திடீரென மயங்கி கீழே விழுந்த நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியுடன் ஓமந்தை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதிலும் அவர் முன்னரே மரணமடைந்துள்ளார்

தெற்கிலுப்பைகுளம் பகுதியினை சேர்ந்த 54 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்தவராவார்