திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.

03.08.2025 09:18:42

உலகம் போற்றும் திருக்குறள் ஒரு புகழ்பெற்ற தமிழ் நூல் ஆகும். திருவள்ளுவரால் இயற்றப்பட்ட இந்நூல் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. திருக்குறள் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது, ஏனென்றால் இதன் கருத்துக்கள் எல்லா காலத்திற்கும், எல்லா இடத்திற்கும் பொருந்தும்.

இந்நிலையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.