தடுப்பூசி போடும் பணி ஒரு இயக்கமாகவே மாறிவிட்டது

12.09.2021 16:03:47

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு இயக்கமாகவே மாறிவிட்டது என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். 

வழக்கத்தை விட இரு மடங்கு, 3 மடங்கு மக்கள் இன்று தடுப்பூசி போட முன்வந்துள்ளனர். தொடர் விழிப்புணர்வு மூலம் இன்று இதுவரை 23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளோம்.