தொண்டர்களுக்கு முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும்
தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசியல் கூட்டங்களால், குடும்ப நிகழ்ச்சிகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வோர் முகக்கவசம் அணிவதில்லை. இந்தநிலையில் முகக்கவசம் அணிய தொண்டர்களுக்கு கட்சிகள் அறிவுறுத்த வேண்டும்.
தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்பட 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை, தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
சென்னையில் கடந்தாண்டு கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த இடங்களில் தற்போது குறைவாக உள்ளது.
கொரோனா உறுதியானால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
அரசாங்கம் இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு போடப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.