ஜிம்பாப்வே அணிக்கு 133 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஸ்காட்லாந்து - டி20 உலகக்கோப்பை:

21.10.2022 12:03:00

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் இறுதிப்போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் இறுதிப்போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியாது .

தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சி, மைக்கேல் ஜோன்ஸ் களமிறங்கினர். ஜோன்ஸ் ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த மேத்யூ கிராஸ் 1 ரன்களில் ஆட்டமிழந்தார். .மறுமுனையில் ஜார்ஜ் முன்சி சிறப்பாக விளையாடினார். பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய அவர் அரைசதம் அடித்தார். ஜார்ஜ் முன்சி 51 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்கள் ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறினார்.இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஸ்காட்லாந்து 132 ரன்கள் எடுத்தது, ஜிம்பாப்வே அணி சார்பில் சத்தரா, ரிச்சர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.இதனை தொடர்ந்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாடுகிறது