வட கொரியா மீது மேலதிக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தல்

14.01.2022 04:11:58

வட கொரியா மீது மேலதிக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மீறி ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா முன்னெடுத்துள்ள நிலையிலேயே அமெரிக்கா இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஆறு நீண்டதூர ஏவுகணைகளை வட கொரியா ஏவியுள்ளதாகவும், குறித்த ஒவ்வொரு ஏவுகணைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு எதிராக அமைந்துள்ளதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் ஏவுகணை தயாரிப்புக்கான பொருட்களை ரஷ்யா மற்றும் சீனாவில் இருந்து கொள்வனவு செய்ததாகக் குற்றஞ்சாட்டி, 6 வட கொரிய பிரஜைகள், ரஷ்ய பிரஜை ஒருவர் மற்றும் ரஷ்ய நிறுவனம் ஆகியோரை அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.