கனமழை காரணமாக சென்னையில் பால் உள்ளிட்ட அடிப்படை உணவு பொருட்கள் கிடைப்பதில் சிரமம்
07.12.2023 04:28:18
கனமழை காரணமாக சென்னையில் பால் உள்ளிட்ட அடிப்படை உணவு பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பால் பாக்கெட்டுகள் பெரும்பாலான இடங்களில் கிடைக்காத நிலைதான் நீடித்தது. கிடைத்த இடங்களிலும் அதிக விலைக்கு விற்கப்பட்டன. பல டீக்கடைகளில் போதுமான அளவு பால் இருப்பு இல்லாததால் 'பிளாக் டீ' என்று சொல்லப்படுகின்ற பால் இல்லாத டீ, லெமன் டீ, புதினா டீதான் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டது.