பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா தடுப்பூசி !களை பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

04.03.2021 09:47:17

பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது  குறித்து  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தன் ருவிட்டர் பக்கத்தில் மேற்படி தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “பொது மக்களின் ஆரோக்கியம் மற்றும் நேரத்தின் மதிப்பை அறிந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. எனவே  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள  குறிப்பிட்ட நாள் நேரம் ஆகியவற்றை  மருத்துவமனைகள் பின்பற்ற தேவையில்லை.

தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போடும் இரண்டாம் கட்ட பணி  சமீபத்தில் ஆரம்பமாகியது. இதில்ஷ 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்,  45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.