யாழ்.போதனா வைத்தியசாலை வரலாற்று சாதனை

27.08.2021 09:50:09

யாழ்.போதனா வைத்தியசாலை வரலாற்றிலேயே முதல் தடவையாக சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்கள் வைத்தியர்கள்.

குறித்த சத்திர சிகிச்சையானது கடந்த 18-ம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்த கொரோனா சூழலுக்கு மத்தியில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மூளை இறந்த நிலையிலிருந்த இளம் நோயாளி ஒருவரின் சிறுநீரகத்தை இரண்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு பொருத்தியே இந்த சாதனையை படைத்துள்ளனர் வைத்தியர்கள்.

மேலும் மூளை இறந்த நிலையிலிருந்த இளம் நோயாளியின் சிறுநீரகத்தை தாமாக முன்வந்து தானம் செய்த குறித்த நோயாளியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு யாழ்.போதனா வைத்தியசாலை சமூகம் நன்றியினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.