சீனா உடனான உறவு தான் வட கொரியாவின் முதல் இலக்கு.

11.04.2026 17:26:28

சீனா உடனான உறவை மேம்படுத்துவதே தனது அரசின் முதல் இலக்கு என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை வடகொரியாவின் செய்தி நிறுவனமான KCNA வெளியிட்ட தகவலில், வட கொரியாவின் முதன்மை இலக்கு சீனாவுடனான உறவை மேம்படுத்துவதே ஆகும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

 

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது, உலக அளவில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை எவ்வாறு வலுப்படுத்துவது என்பதன் அவசியத்தை ஜனாதிபதி கிம் ஜாங் உன் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அரசு முறை பயணங்கள், தகவல் பரிமாற்றங்கள் ஆகியவற்றை தீவிரப்படுத்துவது குறித்தும் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி கிம்மின் கருத்துக்கு பதிலளித்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர், வட கொரியா உடனான உறவிற்கு சீனா எப்போது முக்கியத்துவம் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.