மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 12 மணித்தியாத்தின் வருமானம் 28 இலட்சம்!

17.01.2022 10:48:14

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட பணிகள் நிறைவடைந்து, பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல் 12 மணித்தியாலங்களில் 2,805,100 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பகல் 12 மணி தொடக்கம் இரவு 12 மணிவரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு 28 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இக்காலப்பகுதியில் 13,583 வாகனங்கள் மீரிகம முதல் குருநாகல் வரை அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.