இந்திய ஹெலிகாப்டர்களை பராமரிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம்!

29.11.2025 13:30:49

இந்திய கடற்படையின் MH-60R ஹெலிகாப்டர் படைக்கு பராமரிப்பு மற்றும் ஆதரவு வழங்கும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ.7,995 கோடி ஆகும். Letters of Offer and Acceptance (LOAs) மூலம் 5 ஆண்டுகள் காலத்திற்கு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது. Foreign Military Sales திட்டத்தின் கீழ் கையெழுத்திடப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், புது டெல்லியில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆதரவு திட்டம், ஹெலிகாப்டர்களுக்கான உதிரி பாகங்கள், தொழில்நுட்ப பயிற்சி, பராமரிப்பு, பழுது நீக்கம், Intermediate level பராமரிப்பு வசதிகள் அமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இதன் மூலம், ஹெலிகாப்டர்கள் எப்போதும் செயல்பாட்டுக்கு தயாராக இருக்கும் வகையில் பராமரிப்பு வலுப்படுத்தப்படும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் வசதிகள் உருவாக்கப்படுவதால், நீண்ட காலத்தில் வெளிநாட்டு சார்பு குறையும்.

MSME-கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் பங்கேற்பதன் மூலம் உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.

இந்த ஹெலிகாப்டர்கள் அனைத்து வானிலை சூழலிலும் இயங்கக்கூடியதாகும். குறிப்பாக, Anti-Submarine Warfare திறன் கொண்டவை. கப்பல்களிலிருந்தும், பல்வேறு இடங்களிலிருந்தும் இயக்கப்படக்கூடியவை.

இந்த ஒப்பந்தம், இந்திய கடற்படையின் செயல்திறனை அதிகரிப்பதோடு, இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.