75 ஆண்டுகளாக தங்கத்தை பதுக்கி வைத்திருக்கும் அமெரிக்கா

01.02.2023 22:10:11

அமெரிக்க அரசானது மூன்று பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் முதலாவதாக தங்கம் கருதப்படுகிறது.

எட்டாயிரம் டொன் தங்கம் அமெரிக்க அரசின் வசம் பாதுகாப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தங்கத்தை பாதுகாக்க 26,000 படைவீரர்களை அமெரிக்க அரசு பயன்படுத்திவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இருப்புக்களை பார்வையிடுவதற்காக மட்டுமே சிறிதளது தங்கம் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

பெட்ரோல்

குறித்த தங்கத்தின் அளவை புதியதாக சேர்ப்பதும் இல்லை, விற்பதும் இல்லை என கூறப்படுகிறது. 75 ஆண்டுகளாக பூட்டிவைத்திருக்கும் குறித்த தங்கத்தை விற்பதற்கு முயற்சித்தால் உலக தங்க சந்தை சரிந்துவிடும் என தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதற்கு காரணம் உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 25% அமெரிக்க அரசிடம் உள்ளதக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

இரண்டாவது பொருளாக 70 கோடி பீப்பாய் பெட்ரோலையும் அமெரிக்க அரசு பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

சீஸ்

வளைகுடா போர் 1970களில் இடம்பெற்ற காலப்பகுதியில் பெட்ரோல் தட்டுப்பாடு வராமல் இருப்பதற்காக நாடெங்கும் இரகசியமாக பெட்ரோலை தேக்க தொட்டிகளை அமைத்து 70 கோடி பீப்பாய் பெட்ரோலை பாதுகாத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அரசு மூன்றாவதாக பதுக்கி வைத்திருக்கும் பொருளாக சீஸ் காணப்படுகின்றது. அமெரிக்க அரசின் கையிருப்பில் 150 கோடி டொன் சீஸை நாடெங்கும் குளிர் பாதுகாப்பறைகள் கொண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப உணவு தட்டுப்பாடு வந்தால் அவற்றை இலவசமாக ஏழைகளுக்கு உணவு வழங்கும் வங்கிகளுக்கு விநியோகம் செய்யவே இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சீஸ் பழுதடையும் பொருள் என்பதால் பழுததைவதற்கு முன்பாகவே குறித்த வங்கிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு, மீண்டும் நிரப்பி குறித்த மட்டத்தில் பேணி பாதுகாத்து வருகின்றனர்.

கனடா

கனடா அரசும் விட்டேனா பார் எனப்படும் மேபிள் பாணியை கையிருப்பில் நிரப்பி வைத்துள்ளது.

மேபிள் பாணி என்பது தேன் போன்ற ஒரு இனிப்பு பொருளாகும்.

குறித்த பொருளின் உற்பத்தி அதிகரிப்பின் போது அதை நிரப்பி விலை சரிவு ஏற்படுவதை தடுப்பதோடு விலை அதிகரிப்பின் போது சந்தைக்கு வழங்கி விலை அதிகரிக்கரிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.