கிழக்கில் கறுப்பு கொடிகளுடன் படுகொலை நினைவு கூறல்
1990 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி மட்டக்களப்பு - ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களை நினைவு கூர்ந்து கறுப்புக் கொடி மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வினை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கவனம் செலுத்தி அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை வெளிநாட்டில் உள்ள சில தரப்பினால் நியாயப்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் அக்கரப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, நிந்தவூர், ஒலுவில், சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவ்வாறு கறுப்புக் கொடிகள் ஏந்தியும் சுவரொட்டிகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்